ஆசியாவின் சக்தி வாய்ந்த 50 பெண்களை (தொழில் பிரிவு) போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. இதில் ஆறு இந்தியர்கள் இடம் பெற்றிருக் கிறார்கள்.
இதில் சென்னையைச் சேர்ந்த அகிலா ஸ்ரீனிவாசனும் இடம் பெற்றிருக்கிறார். இவர் ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராவார்.
தவிர ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருந்ததி பட்டாச்சார்யா, ஐசிஐசிஐ வங்கி யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சார், பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷா, ஆக்ஸிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஷிகா ஷர்மா மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உஷா சங்வான் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை விஞ்சினார் சன் பார்மா நிறுவனத்தின் திலிப் சாங்வி.