இந்தியாவின் பெரிய பார்மா நிறுவனமான சன்பார்மா ரான்பாக்ஸி நிறுவனத்தை வாங்குவதாக கடந்த வருடம் அறிவித்தது. இணைப்புப் பணிகள் புதன்கிழமை முடிந்ததாக சன் பார்மா நிறுவனம் தெரிவித்தது.
இணைப்புப் பணிகள் முடிந்ததால் விரைவில் ரான் பாக்ஸி பங்கு ஏப்ரல் மாதத்தில் பங்குச்சந்தையில் இருந்து நீக்கப்படும். ஒரு ரான்பாக்ஸி பங்கு வைத்திருப்பவர்களுக்கு 0.8 சன் பார்மா பங்கு வழங்கப்படும். இந்த இணைப்புக்கு பிறகு பெரிய பார்மா நிறுவனமாகவும், சர்வதேச அளவில் ஐந்தாவது நிறுவனமாகவும் சன் பார்மா இருக்கும்.
கூட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாயாகவும், கூட்டு நிறுவனத்தின் வருமானம் 30,000 கோடி ரூபாயாகவும் இருக்கும்.
இணைப்புக்கு பிறகு இந்த இரு நிறுவனங்களும் ஐந்து கண்டங்களில் 150 நாடுகளுக்கு மேல் தங்களது மருந்துகளை விற்பனை செய்கின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு 30 கோடி டாலர் ஒதுக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.