நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியின் இரண்டாவது சுற்று நேற்று தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிருந்தா மற்றும் சசி நிலக்கரி சுரங்கப் பகுதியில் ஒரு டன்னுக்கு ரூ. 1,804 என்ற விலையில் ஏலம் கேட்டு உஷா மார்ட்டின் நிறுவனம் விண்ணப்பம் செய் துள்ளது.
முன்னதாக இந்தப் பகுதி அபிஜித் இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்துக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. இப்பகுதியில் ஆண்டுக்கு 1,520 டன் நிலக்கரி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜித்பூர் மற்றும் மொய்த்ரா ஆகிய பகுதிகளை ஏலம் எடுக்க அதானி பவர், ஜேஎஸ் டபிள்யூ ஸ்டீல், செயில், பால்கோ ஆகிய நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இந்தப் பகுதியை ஏலம் விடுவதற்கான நடைமுறை நேற்று மாலை முடிவடைந்தது.
இந்தப் பகுதியில் உள்ள சுரங்கமானது அனல் மின் நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தாகும். இதனால் அதானி பவர் நிறுவனம், அதுனிக் பவர் மற்றும் நேச்சுரல் ரிசோர்சஸ், ஜெய்பிரகாஷ் பவர் வெஞ்சர்ஸ் மற்றும் ஜிண்டால் பவர் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
முன்னர் இந்த சுரங்கம் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட் டிருந்தது. அனல் மின் நிலையம் அல்லாத பிற பணிகளுக்காக மொய்த்ரா பகுதி ஒதுக்கப் பட்டது. இதைப் பெறுவதற்கு ஜெய்ஸ்வால் நீகோ இண்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், செயில் ஆகிய நிறுவனங்கள் போட்டி யிடுகின்றன. இந்த சுரங்கம் முன்னர் ஜெய்ஸ்வால் நீகோ நிறுவனத் துக்கு ஒதுக்கப்பட்டது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் பெருமளவு ஊழல் நடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த தைத் தொடர்ந்து அனைத்து ஒதுக்கீடுகளையும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இப்போது ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட ஏலம் தொடங்கியுள்ளது.