வெளிநாட்டு முதலீட்டு கொள்கை குறித்த மத்திய அரசின் ஆவணங்களை திருடிய வழக்கில் ‘பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்’ (பிடபிள்யூசி) நிறுவனத்துக்கும் தொடர்பு உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதில் பிடபிள்யூசி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் யார் என்பதை தெரிவிக்க மத்திய புலனாய்வு அமைப்பு மறுத்துவிட்டது. ஆனால் மத்திய நிலையில் இருக்கும் அதிகாரி என்று சிபிஐ தெரிவித்தது. இவர் நிதி அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகார அமைச்ச அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் கடந்த வாரத்தில் மும்பையில் கைதான பட்டய கணக்காளருடனும் இவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது.
சில மூத்த அதிகாரிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தம் இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இதுவரை ஐந்து நபர்கள் கைது செய்யப்பட் டிருக்கிறார்கள்.
``இந்த விவகாரத்தில் எங்களது அதிகாரி சிபிஐ அதிகாரி களை சந்தித்து விளக்கம் அளித் திருக்கிறார். தேவையான விளக் கங்களை அளித்திருக்கிறோம்’’ என்று நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.