வணிகம்

சீனாவின் வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும்: ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு

பிடிஐ

அடுத்த நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி சீனாவின் வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும் என்று ஆசியா மேம்பாட்டு வங்கி (ஏடிபி) கணித்திருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் 7.4 சதவீத வளர்ச்சியும், 2015-16-ம் நிதி ஆண்டில் 7.8 சதவீத வளர்ச்சியும் 2016-17-ம் நிதி ஆண்டில் 8.2 சதவீத வளர்ச்சியையும் இந்தியா எட்டும் என்று ஏடிபி கணித்தி ருக்கிறது.

இதற்கிடையே சீனாவின் வளர்ச்சி இறங்கு முகத்தில் இருக்கும் என்று கணித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 7.4 சதவீதத் திலிருந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என்று ஏடிபி தெரிவித் திருக்கிறது.

அடுத்த நிதி ஆண்டில் மேலும் சரிந்து 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

முதலீட்டாளார்கள் இந்தியாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அரசாங்கம் எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகள், பொருள் களுக்கான தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் அடுத்த சில ஆண்டுகளுக்கு சீனாவின் வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று ஏடிபி தெரிவித்திருக்கிறது.

முதலீட்டுக்கு சாதகமான சூழல், நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேம்பட்டிருப்பது ஆகியவை சாதகமாக இருந்தாலும் சில சவால்களும் இருக்கின்றன என்று ஏடிபியின் தலைமை பொருளாதார அறிஞர் ஷாங் ஜின் வெய் (Shang-Jin Wei) தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT