வணிகம்

ஹோண்டா ரூ.965 கோடி முதலீடு: கார், பைக் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

பிடிஐ

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஜப் பானின் ஹோண்டா நிறுவனம் ரூ. 965 கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி அதிகரிப்புக்காக இத்தகைய முதலீடு மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தபுகாரவில் உள்ள கார் உற்பத்தித் தொழிற்சாலையில் ரூ. 380 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.20 லட்சம் கார் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆலையின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 1.80 லட்சமாக உயரும்.

கர்நாடக மாநிலம் நரசபுராவில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் 3-வது மோட்டார்பைக் உற்பத்தி செய்யும் ஆலையில் ரூ. 585 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் இருசக்கர வாகன உற்பத்தி ஆண்டுக்கு 24 லட்சமாக உயரும்.

உற்பத்தித் திறன் அதிகரிப்பு 2016-ம் ஆண்டு மத்திய வாக்கில் மேற்கொள்ளப்படும். இந்த விரிவாக்க நடவடிக்கை மூலம் கூடுதலாக 600 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் கார்களான அமேஸ், ஹோண்டா சிட்டி ஆகியவற்றுக்கு பெருமள விலான வரவேற்பு உள்ளதைத் தொடர்ந்து விற்பனை 44 சதவீதம் அதிகரித்தது. இந்நிறுவனம் கடந்த ஆண்டில் 1,66,366 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய முயற்சி யான மேக் இன் இந்தியா திட்டத் தில் தன்னை இணைத்துக் கொள் வதில் ஹோண்டா தீவிரமாக உள்ளது. நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அடுத்த மூன்றாண்டுகளில் 39 சதவீதம் உயரும் என்று நிறு வனத்தின் தலைவர் கெய்தா முராமட்ஸு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT