வணிகம்

ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தையில் சரிவு

செய்திப்பிரிவு

ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன. வியாழன் அன்று மார்ச் மாத எப் அண்ட் ஓ வர்த்தகம் முடிவுறுவதால் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்க சூழ்நிலை நிலவுகிறது.

சென்செக்ஸ் 30 புள்ளிகள் சரிந்து 28161 புள்ளியில் முடிவடைந்தது. நிப்டி 8 புள்ளிகள் சரிந்து 8542 புள்ளியில் முடிவடைந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன.

துறை வாரியான குறியீடுகளில் ஆட்டோ குறியீடு அதிகபட்சமாக 1.17 சதவீதம் சரிந்து முடிந்தது. இதற்கடுத்து வங்கித்துறை குறியீடு 0.61 சதவீதமும், ஐடி குறியீடு 0.5 சதவீதமும் சரிந்து முடிந்தன.

மாறாக ஹெல்த்கேர் குறியீடு 1.84 சதவீதம் உயர்ந்து முடிந்தது. கன்ஸ்யூமர் டியூரபிள், இன்பிரா, ஆயில் அண்ட் கேஸ் ஆகிய குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன.

          
SCROLL FOR NEXT