வணிகம்

மைக்ரோமேக்ஸில் சாப்ட்பேங்க் முதலீடு?

செய்திப்பிரிவு

ஜப்பானிய நிறுவனமான சாப்ட் பேங்க் உள்ளிட்ட சில முதலீட்டு நிறுவனங்கள் இந்திய மொபைல் நிறுவனமான மைக்ரோமேக்ஸில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகின்றன.

சுமார் 100 கோடி டாலர் முதலீடு செய்து 20 சதவீத பங்குகளை வாங்குவதற்குத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்குச்சந்தையில் பட்டிய லிடப்படாத இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 500 கோடி டாலர் இருக்கும் என்று கணிக்கப்பட் டிருக்கிறது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் நிறுவனர்கள் மட்டுமல்லாமல் செக்யுஷியா கேபிடல், டிஏ அசோசியேட்ஸ் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களின் முத லீடும் இருக்கின்றன.

2008-ம் ஆண்டு மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் தொடங்கப் பட்டது. சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனையை மைக்ரோமேக்ஸ் விஞ்சி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாப்ட்பேங்க் முதலீடு குறித்து மைக்ரோமேக்ஸ் நிறுவனமும், சாப்ட்பேங்க் நிறுவனமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

SCROLL FOR NEXT