வணிகம்

‘இந்தியாவின் தர மதிப்பீட்டை உயர்த்த வேண்டும்’- பிட்ச் நிறுவனத்திடம் விவாதம்

ராய்ட்டர்ஸ்

இந்தியாவுக்கான தர மதிப் பீட்டை உயர்த்த வேண்டும் என்று பிட்ச் நிறுவனத்திடம் விவாதித் திருப்பதாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த பட்ஜெட்டில் அரசு பல நடவடிக்கைகளை எடுத் திருக்கிறது. குறிப்பாக நிதிப் பற்றாக்குறையைக் குறைத்து, முதலீட்டை அதிகப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது. தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கான மதிப்பீட்டை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

நேற்று பிட்ச் நிறுவன அதிகாரி களுடனான சந்திப்புக்கு பிறகு அவர் கூறினார். பிரிக்ஸ் நாடு களுடன் ஒப்பிடும் போது இந்தியா சிறப்பான நிலைமையில் இருக்கிறது என்று அவர் கூறினார்.

பட்ஜெட் உரையை தரமதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் வரவேற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. நிதிப்பற்றாக்குறையை குறைக்க போதுமான நடவடிக் கைகள் இல்லை என்றாலும், கட்டுமானத்துறைக்கு ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்ததை பிட்ச் பாராட்டி இருக்கிறது.

SCROLL FOR NEXT