இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் மத்திய அரசிடம் இழப்பீடு கோர முடிவு செய்துள்ளது. முன் தேதியிட்ட வரி விதிப்புத் தொகைக்கு இழப்பீடு அளிக்கும்படி கோரியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடின்பரோவைச் சேர்ந்த இந்நிறுவனம் 7 ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்தது தொடர்பாக செலுத்திய வரித் தொகையை திரும்ப அளிக்க வேண்டும் என முறைப்படி நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
மூலதன ஆதாயத்துக்கு விதிக்கப்படும் வரி, 2006-ம் ஆண்டு கெய்ர்ன் இந்தியா உருவாக் கத்தின்போது விதிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய வரி விதிப்பு முறையான வரி கொள்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.
இது ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய் நிறுவனத்திடமிருந்து இந்திய நிறுவனம் உருவாக்கப் பட்டதே தவிர, வேறு எந்த மூன்றாம் தரப்பிற்கும் விற்கப் படவில்லை, இதனால் முதலீட்டு ஆதாயம் எதுவும் நிறுவனம் அடையவில்லை என கூறியுள்ளது.