வணிகம்

செல்போன் நிறுவனங்கள் அரசுக்கு ரூ. 19,351 கோடி நிலுவை

செய்திப்பிரிவு

செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ. 19,351 கோடி பாக்கி வைத்துள்ளன. இது அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) கட்டணம், லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டண மாகும்.

இந்த தகவலை மக்களவை யில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

எழுத்து மூலமாக அமைச்சர் அளித்த பதிலில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அதிக பட்சமாக ரூ. 5,373.28 கோடி செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அலைக்கற்றை கட்டணமாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ. 14,895 கோடி. லைசென்ஸ் கட்டணம் ரூ. 4,455 கோடி என்றும் அவர் குறிப்பிட்டார். இது செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்ததாகும்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ. 16,635 கோடி யாகும். லைசென்ஸ் கட்டணம், வெளிநாடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்காக அளிக்கப்பட்டது, அலைக்கற்றை பயன்பாடு உள்ளிட் டவற்றுக்காக செலுத்தப்பட்ட தாகும். கடந்த நிதி ஆண்டில் (2013-14) அரசுக்கு ரூ. 40,113 கோடி வருவாய் கிடைத்தது. இதில் அலைக்கற்றை ஏலம் மூலமான வருமானம் ரூ. 25,150 கோடியாகும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

சிறப்புப் பொருளாதார மண்ட லங்களுக்கான இடத்தைப் பெற்று, திட்டப் பணிகளை தொடங்காமல் உள்ள 211 நிறுவனங்களுக்கு கூடு தல் அவகாசம் அளிக்கப்பட் டுள்ளது. இத்தகவலை மாநிலங் களவையில் மத்திய தொழில், வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மொத்தம் 224 கால நீட்டிப்பு விண்ணப்பங்களில் 211 நிறுவனங் களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட் டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிறப்புப் பொருளாதார மண்ட லங்களிலிருந்து ஏற்றுமதியின் அளவு 2005-ம் ஆண்டு ரூ. 22,840 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2013-14) இது ரூ. 4.94 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் மொத்தம் உள்ள 352 சிறப்புப் பொருளாதார மண்டலங் களில் 199 மண்டலங்கள் செயல்படுவதாக அவர் கூறினார்.

வர்த்தகப் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சீனாவுடனான பற்றாக்குறை 3,621 கோடி டாலராக உயர்ந்துள்ளது என்றார்.

இரும்பு இறக்குமதி

சீனாவிலிருந்து 29 லட்சம் டன் இரும்பு இறக்குமதி செய்யப் பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உருக்கு மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் இந்த அளவுக்கு இரும்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மொத்தம் இந்தியா இறக்கு மதி செய்த இரும்பின் அளவு 81 லட்சம் டன்னாகும். இதில் அதிகபட்ச மாக சீனாவிலிருந்து 29 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள்

இஎஸ்ஐ அமைப்பு உருவாக்கும் மருத்துவக் கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகள் விரும்பி னால் அவற்றுக்கு மாற்றித் தர முடிவு செய்துள்ளதாக மாநிலங் களவையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். மொத் தம் 12 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற் றுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ. 5,345 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தங்கள் அமைப்பில் உள்ள பணியாளர்களுக்கு ஆரம்ப சுகாதார வசதிகளை மட்டும் செய்து தர முடிவு செய்துள்ளதாகவும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மாநிலங் களுக்கு மாற்றித் தர திட்டமிட் டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் கோவை மற்றும் சென்னையில் இஎஸ்ஐ மருத் துவக் கல்லூரிகள் உருவாகி வருகின்றன.

SCROLL FOR NEXT