வணிகம்

பிபிஎஃப் கணக்கு முதிர்வு காலம் அதிகரிக்க வாய்ப்பு

பிடிஐ

பிபிஎஃப் கணக்கில் செலுத்தப் படும் பணத்தை திரும்பப் எடுப் பதற்கான காலத்தை அதிகரிக்க ஆலோசித்து வருகிறது நிதி அமைச்சகம். மேலும் இதற்கான முதிர்வு காலத்தையும் உயர்த்த உள்ளது.

2015-16ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்த மாதம் 28-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்பில் இதற் கான அறிவிப்பும் இடம்பெறலாம் என தெரிகிறது.

உட்கட்டமைப்பு மேம்பாட் டுக்கு பல வழிகளில் அரசு நிதி திரட்டுகிறது. அந்த வகையில் பிபிஎப் தொகையை நீண்ட காலத்துக்கு இந்த திட்டங்களுக்கு செலவிட மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பிபிஎஃப் கணக்கின் வைப்பு காலத்தை குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாகவும், அதிகபட்சம் எட்டு வருடங்களாகவும் உயர்த்த உள்ளது.

மேலும் இதற்கான முதிர்வு காலத்தை பதினைந்து வருடங் களாக உள்ளதை 20ஆண்டு களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடு கின்றன.

SCROLL FOR NEXT