கோத்ரெஜ் குழுமத்தின் அங்க மான கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் தொழிலை விரிவுபடுத்த ஸ்நாப்டீல் டாட் காம் நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் ரியல் எஸ்டேட் தொழிலை ஆன்லைன் வர்த்தகம் மூலம் மேற்கொள்ள ஸ்நாப்டீல் உதவும்.
தற்போது தனது சொந்த இணையதளம் மூலமாக ஆன் லைன் வர்த்தகத்தில் கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் ஈடுபட்டு வந்தது.
இப்போது கூடுதலாக ஸ்நாப் டீல் ஆன்லைன் மூலம் பெருமளவிலான வாடிக் கையாளரைச் சென்றடைய திட்டமிட்டுள்ளது.
அது தவிர, பதிவு செய்யும்போது பிரத்யேக சலுகைகளையும் அறிவிக்க கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறு வனம் திட்டமிட்டுள்ளது.