எப்.எம்.சி.ஜி. துறையில் இருக்கும் முக்கிய நிறுவனமான ஐடிசி, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் இரண்டு பிராண்டுகளை வாங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் சாவ்லான் மற்றும் ஷவர் டு ஷவர் ஆகிய பிராண்டுகளை வாங்க இருக்கிறது ஐடிசி.இதற்காக ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன. அழகு சாதன பொருட்கள் பிரிவில் ஐடிசி கையகப்படுத்தும் முதல் பிராண்ட்கள் இவைதான்.
இந்த இரு பிராண்டுகளும் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட இருக்கிறது என்கிற தகவல் இதுவரை அதிகார பூர்வமாக வெளியாகவில்லை. இருந்தாலும் ரூ. 300 கோடி முதல் ரூ. 450 கோடி வரை இருக்கலாம் என்று துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.