வணிகம்

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம்

செய்திப்பிரிவு

அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு ஏலத்திற்கு எட்டு முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளன. அலைக்கற்றை ஏலம் வருகிற மார்ச் மாதம் 4 ம் தேதி தொடங்க உள்ளது. அதில் கலந்து கொள்ள ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் ஜியோ, யுனிநார் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் நேற்று விண்ணப்பித்துள்ளன.

ஏலத்தில் பங்குபெற விண் ணப்பம் செய்ய நேற்று கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முக்கிய நிறுவனங்களுக்கான லைசென்ஸ்கள் 2015-16 ம் ஆண்டோடு முடிவடைய உள்ளது. வீடியோகான் நிறுவனம் இந்த ஏலத்தில் பங்குபெற விண்ணப்பிக்கவில்லை.

இந்த ஏலத்தில் பங்கு பெற்று லைசென்ஸ் பெற்றால்தான் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடர்ந்து அளிக்க முடியும்.

SCROLL FOR NEXT