ராஜஸ்தான் மாநில அரசுடன் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 10 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மரபு சாரா எரிசக்தி அமைப்பின் நிர்வாக இயக்குநர் பி.கே. தோசி மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விநீத் ஜெயின் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர்.
இதற்கான நிகழ்ச்சியில் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் அதானி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக 5 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி நிலை யம் அமைக்கப்படும். அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 5 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை தனது சொந்த செலவில் இம்மாநிலத்தில் அமைக்கும்.