வணிகம்

ஹெச்டிஎப்சி வங்கி லாபம் 23% உயர்வு

செய்திப்பிரிவு

ஹெச்டிஎப்சி வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ. 2,326.52 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தைக் காட்டிலும் இது 23 சதவீதம் அதிகமாகும்.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 1,889.84 கோடியாக இருந்தது. வங்கியின் வருமானம் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் 14.9 சதவீதம் அதிகரித்து ரூ. 12,790 கோடியாக உயர்ந்துள்ளத. முந்தைய ஆண்டில் இது ரூ. 11,127 கோடியாக இருந்தது.

இயக்குநர் குழுமம் ரூ. 6.85-ஐ ஒரு பங்குக்கு டிவிடெண்டாக அளிக்க பரிந்துரை செய்தது. கடந்த நிதி ஆண்டு முழுவதில் வங்கியின் லாபம் ரூ. 8,478 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிக மாகும். வங்கியின் வருமானம் ரூ. 49,055 கோடியாக இருந்தது.

எம்ஆர்எப்

சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் எம்ஆர்எப் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 170.87 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் லாபம் சரிந்துள்ளது.

டயர் மற்றும் டியூப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எம்ஆர்எப் நிறுவ னத்தின் நான்காம் காலாண்டு வருமானம் ரூ. 3,297 கோடியாகும். எம்ஆர்எப் நிறுவனம் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையான காலத்தை நிதி ஆண்டாக பின்பற்றுகிறது.

SCROLL FOR NEXT