இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் டிசம்பர் காலாண்டில் 516 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது. வாராக்கடனுக்கு ஒதுக்கியுள்ள தொகை அதிகரித்ததால் நஷ்டம் உண்டாகி இருக்கிறது.
சென்னையை சேர்ந்த இந்த வங்கி கடந்த வருடம் இதே காலாண்டில் 75 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் ஐஓபி மட்டுமே நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 8.12 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 5.27 சதவீதம் மட்டுமே மொத்த வாராக்கடன் இருந்தது. தொகை அடிப்படையில் பார்க்கும் போது 14,500 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த வாராக்கடன் இருக்கிறது.