வணிகம்

காபி ஏற்றுமதி 27 சதவீதம் சரிவு

பிடிஐ

மந்தமான விலை காரணமாக காபி ஏற்றுமதி குறைந்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் காபியின் அளவு 27 சதவீதம் சரிந்து தற்போது 18,475 டன்களாக உள்ளது.

சர்வதேச விலை நிலவரத்தில் உள்ள ஏற்ற இறக்கமான நிலைமை காரணமாக ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதியின் அளவு 25,355 டன்களாக இருந்தது. அராபிகா ஏற்றுமதி 47 சதவீதம் வீழ்ச்சி அடைந்து ஜனவரி மாதம் 4826 டன்களாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 9120 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ரொபஸ்டா காபி 30.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 5736 டன்களாக உள்ளது.

SCROLL FOR NEXT