சீனாவின் பணக்காரர்கள் வரிசை யில் முதலிடத்தில் இருந்த அலிபாபா நிறுவனர் ஜாக் மா இப்போது மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சூரிய மின்னாற்றல் நிறுவன தொழி லதிபர் லி ஹிஜுன் இப் போது முதலிடத்தைப் பிடித் துள்ளார். இவர் ஹனேர்ஜி ஹோல்டிங்ஸ் குழும நிறுவனங் களை நடத்தி வருகிறார்.
ஆன்லைன் வர்த்தக நிறுவன மான அலிபாபா-வின் நிறுவன ரான ஜாக் மா இப்போது சீனாவில் பணக்காரர்கள் வரிசையில 3-வது இடத்திலும் சர்வதேச அளவில் 34-வது இடத்திலும் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 2,450 கோடி டாலராகும்.
முதலிடத்தைப் பிடித்துள்ள லி ஹிஜுனன் சொத்துமதிப்பு 2,600 கோடி டாலராகும். இரண்டா மிடத்தை டாலியன் வாண்டா கமர்ஷியல் பிராப்பர்டீஸ் நிறு வனத்தின் வாங் ஜியான்லின் பிடித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அலிபாபா பங்குகள் விலை சரி வைச் சந்தித்துள்ளன. மொத்தம் 13 சதவீத அளவுக்கு பங்கு விலைகள் சரிந்தன.
உலகின் பெரும் பணக்காரர் களில் 20 பேரில் ஒருவர் சீனாவைச் சேர்ந்தவராக இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சீனாவிலிருந்து உருவெடுக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 16-வது இடத்தில் உள்ள சீன தொழிலதிபர் லி கா-ஷிங்கின் சொத்து மதிப்பு 3,200 கோடி டாலராகும்.
சீனாவில் மொத்தம் 430 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அமெரிக்கா தவிர உலகின் வேறெந்த நாட்டிலும் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையி லான பணக்காரர்கள் கிடையாது.
அமெரிக்காவில் மொத்தம் 537 பெரும் கோடீஸ்வரர்களும் இந்தியாவில் 97 பெரும் கோடீஸ்வரர்களும் உள்ளனர்.