வணிகம்

பேமன்ட் வங்கி தொடங்க ரிலையன்ஸ், பிர்லா, பியூச்சர் குழுமங்கள் தீவிரம்

செய்திப்பிரிவு

பேமன்ட் வங்கி தொடங்குவதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆதித்ய பிர்லா, பியூச்சர் குழும நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. ரிசர்வ் வங்கியிடம் பேமன்ட்வங்கி தொடங்குவதற்கு லைசென்ஸ் கோரும் விண்ணப்பங் களை இந்நிறுவனங்கள் அளித் துள்ளன.

பேமன்ட் வங்கி தொடங்குவதில் தீவிரமாக உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வங்கி, நாட்டின் மிக அதிகக் கிளைகளைக் கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கியுடன் கூட்டு சேர்ந்து பேமன்ட் வங்கி தொடங்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஐடியா செல்லுலர், மதுரா கார்மென்ட்ஸ் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தும் ஆதித்ய பிர்லா குழுமமும் பேமன்ட் வங்கி தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.

கிஷோர் பியானிக்குச் சொந்தமான பியூச்சர் குழும நிறுவனமும் இதில் தீவிரமாக உள்ளது தெரியவந்துள்ளது. நுபியூச்சர் பேமன்ட் வங்கி என்ற பெயரில் தொடங்க லைசென்ஸ் வழங்குமாறு கோரியுள்ளது.

கடந்த வாரம் பார்தி ஏர்டெல் குழும நிறுவனம் கோடக் மகிந்திரா வங்கியுடன் இணைந்து பேமன்ட் வங்கி தொடங்க விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி பேமன்ட் வங்கி தொடங்குவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இத்தகைய வங்கி தொடங்குவதற்கான விண்ணப் பங்களை அளிப்பதற்கு பிப்ரவரி 2-ம் தேதி கடைசி நாள் என தெரிவித்திருந்தது.

ரிசர்வ் வங்கி வகுத்தளித்த வழிகாட்டுதலின்படி பேமன்ட் வங்கியானது வாடிக் கையாளர்களிடம் சேமிப்புகளை திரட்டலாம். நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கில் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை திரட்டலாம். தொடக்கத்தில் பண பட்டுவாடாவை சிறிய அளவில் மேற்கொள்ளவும், வீடுகளின் சேமிப்புகளை பரா மரிக்கவும் இந்த வங்கிகள் அனுமதிக்கப்படும். இந்த வங்கிகள் ஏடிஎம் அமைக்கலாம். கிளை களைத் தொடங்கலாம். மொபைல் மற்றும் இணையதளம் மூலமான சேவையையும் அளிக்கலாம்.

ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்க உத்தேசித்துள்ள பேமன்ட் வங்கியில் எஸ்பிஐ-யின் பங்கு 30 சதவீத அளவுக்கு இருக்கும். பிர்லா தொடங்க விண்ணப்பித்துள்ள பேமன்ட் வங்கிக்கு ஐடியா பேமன்ட் வங்கி என பெயர் சூட்டப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், தொழில் புரிவோர், விவசாயிகள், உள்ளூர் தொழில்முனைவோர் ஆகியோ ருக்கு உதவும் வகையில் பேமன்ட் வங்கிகளின் செயல்பாடு இருக்கும்.

SCROLL FOR NEXT