சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் கூடுதலாகும் என்று கோத்ரெஜ் குழுமத்தின் தலைவர் ஆதி கோத்ரெஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் சரக்கு சேவை வரி விதிப்பை அமல்படுத்து வதன் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கூடுதலாக 2 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் உற்பத்தி அதிகரிப்ப தோடு ஏற்றுமதியும் பெருகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்தபட்ச மாறுதலுக்குள் பட்ட வரி (மேட்) விதிப்பு தற்போது 18.5 சதவீதமாக உள்ளது. இது பாதியாகக் குறைக் கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இவ்விதம் குறைக்கப்பட் டால் அது நிறுவனங்களுக்கு லாபகரமாக இருக்கும். குறிப்பாக உற்பத்தித் துறை நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்றார். உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்வரும் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
உற்பத்தித் துறை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் முதலீடுகள் பெருகும், அந்நிய நிறுவனங்கள் இங்கு வருவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.
அரசு பங்கு விலக்கல் நடவடிக்கைகள் மற்றும் மானியக் குறைப்பால் நாட்டின் பற்றாக்குறை கணிசமாகக் குறையும் என்றார்.
இதனிடைய பஞ்சாப், ஹரியாணா மற்றும் டெல்லி தொழில் வர்த்தக சபை (பிஹெச்டி) கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் பொருள்களுக்கான தேவை மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும் பட்ஜெட் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொருளாதார வளர்ச்சிக்கான வழிமுறைகளும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வரி விதிப்பு முறை களில் உரிய திருத்தங்கள் மேற் கொள்ளப்படும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அதிக வட்டி, பரிவர்த்தனை செலவு ஆகியன உற்பத்தித் துறையை பெரிதும் பாதிப்பதாக அவர் குறிப்பிட் டுள்ளார்.