வணிகம்

தொழிலதிபர் ஷியாம் கோத்தாரி காலமானார்

செய்திப்பிரிவு

தொழிலதிபர் பரத்ஷியாம் கோத்தாரி, அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 53. இவர் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

திருபாய் அம்பானியின் கடைசி மகள் நினாவின் கணவரான பரத்ஷியாம் சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு ஒரு மகள் (நயன்தாரா), மகன் (அர்ஜுன்) உள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த தொழி லதிபரான ஷியாம் கோத்தாரி, ஹெச்சி கோத்தாரி குழுமத்தை நிர்வகித்து வந்தார். இக்குழுமம் பெட்ரோகெமிக்கல்ஸ், சர்க்கரை ஆலை, உயிரித் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட் டுள்ளது. இந்தியாவில் முதலில் பரஸ்பர நிதித் திட்டத்தை உருவாக்கியது இவரது குழுமம் தான். பயனியர் ஃபண்ட் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த நிதித்திட்டத்தை பின்னாளில் பிராங்ளின் டெம்பிள்டன் கையகப்படுத்தியது. இவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் இன்று (பிப்.25) நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT