பேமன்ட் வங்கி மற்றும் சிறிய வங்கி தொடங்க மொத்தம் 113 நிறுவனங்கள் விண்ணப்பித் துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
சிறிய வங்கிகள் தொடங்க 72 விண்ணப்பங்களும் பேமண்ட் வங்கி தொடங்க 41 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. வங்கி தொடங்க விண்ணப்பிப்பதற்கு திங்கள்கிழமை (பிப்ரவரி 2) கடைசி நாளாகும். கடைசி நேரம் வரை விண்ணப் பங்கள் பெறப்பட்டதால் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விண்ணப்பங்களை பரிசீலிப் பதற்காக வெளியிலிருந்து இரண்டு குழுக்கள் (இஏசி) நியமிக் கப்பட்டுள்ளன. இவை விண்ணப் பங்களை பரிசீலித்து பரிந்துரைக்கும் என்றார். ஆனால் எத்தனை லைசென்ஸ்கள் வழங் கப்படும் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இஏசி குழுவின் தலைவர்களாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் உஷா தோரட் மற்றும் ஆர்பிஐ இயக்குநர் குழு இயக்குநர் நசிகேத் மோர் ஆகியோர் இருப்பர்.
சிறிய வங்கிகளுக்கான விண் ணப்பங்களை உஷா தோரட் தலைமையிலான குழு பரிசீலிக் கும். பேமன்ட் வங்கிகளுக்கான விண்ணப்பங்களை நசிகேத் மோர் தலைமையிலான குழு ஆய்வு செய்யும்.
பேமன்ட் வங்கிகள் பணத்தை திரட்டலாம். சேமிப்புகளை வைத்திருக்கலாம். ஆனால் இத்தகைய வங்கிகள் கிரெடிட் கார்டுகளை (கடன் அட்டை) வழங்கக் கூடாது. அதேபோல வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது.
சிறிய வங்கிகளைப் பொருத்த மட்டில் அடிப்படையில் வங்கிகள் போல செயல்படலாம். வாடிக் கையாளர்களிடம் சேமிப்புகளைத் திரட்டலாம். சிறு வணிகக் கடன்கள், விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, முறைசாரா தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவது போன்ற நடவடிக் கைகளை எடுக்கலாம். பேமன்ட் வங்கி தொடங்குவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் கூட்டு சேர்ந் துள்ளது.
இதேபோல சுநீல் மித்தலின் பார்தி ஏர்டெல் நிறுவனம் கோடக் மஹிந்திரா வங்கியுடன் சேர்ந்து பேமன்ட் வங்கிக்கான விண்ணப்பத்தை அளித்துள்ளது.
கிஷோர் பியானியின் பியூச்சர் குழுமம் பேமன்ட் வங்கி தொடங்குவதற்காக ஐடிஎப்சி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஏற்கெனவே ஐடிஎப்சி நிறுவனத்துக்கு வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இன்னும் ஐடிஎப்சி நிறுவனம் வங்கி தொடங்கவில்லை.
சிறிய நிதி நிறுவனமான எஸ்கேஎஸ் மைக்ரோ பைனான்ஸ், தரகு நிறுவனமான இந்தியா இன்ஃபோலைன், யுஏஇ எக்ஸ்சேஞ்ச், வீட்டுக் கடன் வழங்கும் திவான் ஹவுசிங் மற்றும் எஸ்இ இன்வெஸ்ட்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் சிறிய வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ளன. ஃபினோ பேடெக், வக்கிராங்கி மற்றும் வோடபோன் நிறுவனங்களும் பேமன்ட் வங்கி தொடங்குவதற்கு விண்ணப்பித்துள்ளன.
ஆக்ஸிஜென் நிறுவனம் ஆர்பிஎல் வங்கியுடன் கூட்டு சேர்ந்து பேமன்ட் வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ளது. முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட் மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனம், ஆன்லைன் ரீசார்ஜ் நிறுவனமான பேடிஎம் ஆகிய வையும் பேமன்ட் வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ளன.
ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், முத்தூட் பின்கார்ப் லிமிடெட் ஆகியன சிறிய வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ளன.
ராம் குழுமம் முன்னர் சிறிய வங்கி தொடங்க விண்ணப்பித்திருந்தது. ஆனால் இம்முறை அந்நிறுவனம் எதற்கும் விண்ணப்பிக்கவில்லை.