வணிகம்

நிலக்கரி சுரங்க ஏல வருமானம் ரூ.84,000 கோடி: 2-வது கட்ட ஏலம் பிப்.25-ல் தொடக்கம்

ஐஏஎன்எஸ்

கடந்த 7 நாள்களாக நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஏலம் மூலம் அரசுக்கு இதுவரை ரூ. 84 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.

அடுத்த கட்ட ஏலம் பிப்ரவரி 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஏலம் ஏப்ரல் 2 ம் தேதி வரை நடைபெறும் என நிலக்கரித் துறை செயலர் அனில் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

27 சுரங்கங்கள் பிற தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட் டுள்ளன. 56 சுரங்கங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

86 சுரங்க பகுதிகள் ஏலம் விடப்படும் அல்லது ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நடவடிக்கை மார்ச் 31-ம் தேதி நடைபெறும் என்று அவர் கூறினார்.

ஏலம் மூலம் கிடைத்துள்ள வருமானத்தில். ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 607 கோடி, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ரூ. 39,900 கோடி, மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரூ. 18,900 கோடி கிடைக்கும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கரே பால்மா 2-வது நிலக்கரி சுரங்க பகுதியை ஜிண்டால் குழுமம் ஏலம் எடுத்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஆண்டுக்கு 62 லட்சம் டன் நிலக்கரி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு டன் ரூ. 108 என்ற மதிப்பில் ஜிண்டால் குழுமம் இந்த பகுதியில் சுரங்கம் வெட்டுவதற்கான ஏலத்தைப் பெற்றுள்ளது. குறைந்த தொகை ஏலம் கேட்பவருக்கு வழங்கப்படும். இதன் மூலம் உற்பத்தி செலவு குறையும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ. 1.86 லட்சம் கோடி முறைகேடு நடந்ததாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) குற்றம் சாட்டியிருந்தார். அப்போது ஆய்வுக்குழு மூலம் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டன.

சிஏஜி அறிக்கை எந்த அளவுக்கு உண்மையானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

கடுமையான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து 204 சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து இந்த சுரங்க ஒதுக்கீடுகளுக்கு ஏலம் நடத்தப்படுகிறது. இப்போது வெளிப்படையான முறையில் ஏலம் நடைபெறுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது 19 நிலக்கரி சுரங் கங்களுக்கு ஏலம் நடைபெற் றுள்ளது.

SCROLL FOR NEXT