மியூச்சுவல் பண்ட்களில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 32 சதவீதம் உயர்ந்து 5.24 லட்சம் கோடி ரூபாயாக இருக் கிறது. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது (கடந்த டிசம்பர் 2014 வரை) சிறு முதலீட்டாளர்களின் பங்கு உயர்ந்திருக்கிறது.
இதில் 15 பெரு நகரங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. மொத்த சிறுமுதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் 72 சதவீதம் முதலீடு இந்த நகரங்களில் இருந்து வருகிறது.
மொத்தமாக 45 மியூச்சுவல் பண்ட்கள் நிர்வகிக்கும் மொத்த தொகை 11 லட்சம் கோடி ரூபாயாகும்.
பங்குச் சந்தை உயர்ந்ததன் காரணமாக பெரும்பாலான முதலீடு பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் இருந்துதான் வந்திருக்கிறது.
மொத்தம் 4.03 கோடி மியூச்சுவல் பண்ட் கணக்குகள் இருக்கின்றன. இதில் 3.86 கோடி கணக்குகள் சிறுமுதலீட்டாளர் களுடையவை.