தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண் இந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும். யுனிவர்சர் அக்கவுண்ட் நெம்பர் எனப்படும் யுஏஎன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கி மூலம் தங்கள் கணக்குகளை மேற்கொள்ள முடியும்.
இப்போது வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும் 5 கோடி ஊழியர்களுக்கும் இந்த நிரந்தர கணக்கு எண் அளிக்கப்படும். இதன்பிறகு மற்றவர்களுக்கு எண் வழங்கப் படும் என்று இபிஎப்ஓ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இத்தகைய நிரந்தர எண் வழங்கப் பட்டுவிட்டால் ஊழியர் கள் பணி மாற்றம் செய்தாலும் புதிதாக எண் வழங்கப்பட மாட்டாது. இதனால் முறை சார்ந்த பணிகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இது இருக்கும்.
இந்த நிரந்தர கணக்கு எண் ஒரு ஊழியருக்கு ஒரு முறை மட்டுமே அளிக்கப்படும். அவர் வெவ்வேறு நிறுவனங் களுக்கு பணி மாற்றம் செய்தா லும் இந்த எண்ணிலேயே தொடர வேண்டும். இதற்காக இபிஎப்ஓ நிறுவனம் சி-டாக் எனப்படும் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது.
ஆண்டுதோறும் 12 லட்சம் ஊழியர்கள் பணி மாற்றம் செய்கின்றனர். இத்தகைய நிரந்தர கணக்கு எண் தங்களுடைய பணிச் சுமையை வெகுவாகக் குறைக்கும் என்று இபிஎப் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 1.21 தொழிலாளர்கள் இபிஎப் அமைப்பில் உள்ளனர்.