வட்டிவிகிதம் குறைந்தால் உள்நாட்டு தொழிலில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உற்பத்திக்கான செலவு குறைய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கடன் கிடைப்பதற்கான விதிமுறைகள் அதிகம் இல்லை என்றே உணர்கிறேன் என்றவர், அதை சமாளிக்கக்கூடிய அளவுக்கு வட்டி விகிதங்கள் இருக்க வேண்டும் என்றார். மேலும் மேக் பார் இந்தியா திட்டத்துக்கு இது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
சில வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது துணை நிறுவனங்களை நடத்துகின்றன. இது போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்கு வெளியே குறைந்த வட்டியில் கடன் ஏற்பாடுகளை செய்து கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறும் வசதி வேண்டும் என்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.