வணிகம்

பங்குச்சந்தையில் புதிய உச்சம்

செய்திப்பிரிவு

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் புதிய உச்சத்தைத் தொட்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன் முறையாக 29 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது.

தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 31 புள்ளி உயர்ந்து 8,760 புள்ளிகளில் என்ற உச்சத்தில் வர்த்தகமாகியிருந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து 6-வது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து 61.56 என்ற அளவில் இருந்தது.

SCROLL FOR NEXT