ரயில் போக்குவரத்து மற்றும் கோல் இந்தியா தனியார் மயமாகாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். தொழிற்சங்கங் க ளுடனான பட்ஜெட் விவாதத்தின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நோக்கம் தனியார்மயமாக்கலை ஆதரிப்பது அல்ல. அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்குவது, தற்போது இருக்கும் வேலைகளை பாதுகாப்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த பட் ஜெட் விவாதத்தில் 11 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்ளக் கூடாது, சிக்கலில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் நிதி அமைச் சகத்திடம் முன்வைத்தன.
குறிப்பாக நிலக்கரி, காப்பீடு, நிலம் கையகப்படுத்துவதற்கான அவசர சட்டத்தை அவர்கள் எதிர்த் தனர். மேலும், இந்த அவசர சட்டங்களை விலகிக்கொள்ளு மாறும் தொழிற்சங்கங்கள் வலி யுறுத்தின.