பார்தி ஏர்டெல் நிறுவனம் பேமெண்ட் வங்கி தொடங்க திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனமான ஏர்டெல் எம் காமர்ஸ் சர்வீசஸ் நிறுவனம் (ஏ.எம்.எஸ்.எல்.) மூலம் பேமெண்ட் வங்கி தொடங்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனம் ஏர்டெல் மணி என்னும் பெயரில் மொபைல் போன்கள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் சேவையை கடந்த 2011-ம் ஆண்டு முதல் செய்து வருகிறது.
மேலும், பேமெண்ட் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் கோடக் மஹிந்திரா வங்கி, ஏ.எம்.எஸ்.எல். நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் கோடக் 19.90 சதவீத பங்குகளை வாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் அனைவருக்கும் நிதி சேவை கிடைக்கும், ரிசர்வ் வங்கி முயற்சி வரவேற்கதகுந்தது என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் தெரிவித்தார்.
ஏர்டெல் நிறுவனம் தொழில் நுட்பம் மற்றும் வினியோகத்தில் சிறந்து விளங்குகிறது. கிராமங் களில் ஏர்டெல் சேவை அளிக்கிறது. ஏர்டெலில் முதலீடு செய்து இரு தரப்புக்கும் வெற்றியாகும் என்று கோடக் மஹிந்திரா வங்கியின் இணை நிர்வாக இயக்குநர் திபக் குப்தா தெரிவித்தார்.
மொபைல் நெட்வொர்க் சந்தையில் 31 சதவீதம் ஏர்டெல் வசம் இருக்கிறது. இந்தியா முழுவதும் 21.5 கோடி வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பயன்படுத்துகிறார்கள்.
சிறிய வங்கி தொடங்கும் எஸ்.கே.எஸ். மைக்ரோபைனான்ஸ்
சிறிய வங்கி தொடங்க முடி வெடுத்திருப்பதாக ஹைதராபாத்தை சேர்ந்த எஸ்.கே.எஸ். மைக்ரோபைனான்ஸ் தெரிவித் திருக்கிறது. இதற்கான ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிப்பதற்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட ஒரே மைக்ரோபைனான்ஸ் நிறுவனம் எஸ்.கே.எஸ். மட்டுமே.
இதற்கிடையே இந்த நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 21.4 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம் இப்போது 41.4 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.