மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் நேற்று 29000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 117 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தது. ஐரோப்பிய மத்திய வங்கி கூட்டத்தின் முடிவுகள் வெளியானதால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் சாதகமான நிலை காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 31 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8761 புள்ளிகளின் நிலை கொண்டிருந்தது.
முன்னதாக ஐரோப்பிய மத்திய வங்கியின் கூட்ட முடிவுகள் வெளியானதால் நேற்று இந்திய சந்தையிலும் சாதகமான சூழ்நிலை உருவானது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை யில் 1347 பங்குகள் ஏற்றத்தைக் கண்டன. 1580 பங்குகள் சரிவில் முடிந்தது.
முதல் முறையாக 30 சென்செக்ஸ் பங்குகள் 29000 புள்ளிகளைக் கடந்துள்ளன. தொடர்ந்து 6 நாட்களாக சந்தை 29000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆகிறது. சன் பார்மா, டிஎல்எப் மற்றும் ஆக்ஸிஸ் வங்கிப் பங்குகள் ஏற்றத்தையும் ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎப்சி பங்குகள் இறக்கமும் கண்டன.