இங்கிலாந்தில் ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது இந்த டெஸ்லா ரோட்ஸ்டார் ஸ்போர்ட்ஸ் காரை பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அப்படி ஒரு ஈர்ப்பு. இந்தக் காரை பார்த்ததும் கிட்டத்தட்ட துள்ளிக் குதித்துவிட்டேன். இரண்டு பேர் உட்கார்ந்து செல்லும் விதமாக இருக்கும் இந்த டெஸ்லா காரின் வசதியும், சொகுசும் அலாதியானது. ரொம்பவே கியூட்டாக உணர வைக்கும். மேலே திறந்த நிலையிலும் இதை மாற்றிக்கொள்ள முடியும். அதுபோல வலது பக்கமும், இடது பக்கமுமாக இரண்டு பக்கமும் ஓட்ட முடியும்.
மனசுக்கு பிடித்தமான, ரொம்பவே விசேஷமான சில தருணங்களை நமக்கே நமக்கு என்று நினைப்போம். அப்படி மனசுக்கு நெருக்கமான தருணமாக அமைந்தது அந்த கார் பயணம். பல கார்களைப் பயன்படுத்தினாலும் இந்த கார்தான் கண்முன் நிற்கிறது. இந்த வருடத்தில் டெஸ்லா ஸ்போர்ட்ஸ் காரை எனக்கு பிடித்த கருப்பு கலரில் வாங்கிவிட வேண்டும் என்பதுதான் என் இலக்கு. அப்படி ஒரு நெருக்கம். நடக்கும்.