வணிகம்

’டாடா ‘போல்ட்’ அறிமுகம்

செய்திப்பிரிவு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ‘போல்ட்’ என்ற புதிய ரக கார் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்போர்டி ஹேட்ச்பேக் காரான போல்ட், பூனாவில் உள்ள பிம்ப்ரி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ரக கார் ரூ.4.43 லட்சம், டீசல் ரக கார் ரூ.5.52 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இரட்டை ஏர் பேக்குகள் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. ஹேட்ச்பேக் ரக கார்களிலிலேயே இந்தக் காரில் அதிகளவு இடவசதி மற்றும் சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நேற்று நடைபெற்ற அறிமுக விழாவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், பயணிகள் வாகன வர்த்தகப் பிரிவின் தலைவர் மாயன் பரீக் பேசும்போது, “நாடு முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட டாடா மோட்டார்ஸ் விற்பனையகங்களில் இந்தக் கார் விற்பனை செய்யப் படும்.

மேலும், டாடா நிறுவனத்தின் கார்களுக்கு மூன்று ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கும் திட்டம் மற்றும் இலவச சாலையோர உதவி சேவைகளை வழங்கும் புதிய சர்வீஸ் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT