வணிகம்

புனேயில் சர்வதேச வாகன தொழில்நுட்பக் கண்காட்சி

செய்திப்பிரிவு

வாகன தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கண் காட்சியை அசோக் லேலண்ட் நிறுவனம் நடத்துகிறது. சர்வதேச அளவில் வாகன தயாரிப்பாளர்கள், மோட்டார் வாகன ஆராய்சியாளர்கள் பலரும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.

அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த சர்வதேச கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்கிறது. இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் இந்த சர்வதேச கண் காட்சியை நடத்துகிறது. 14வது வருடமாக இந்த சங்கம் கண்காட்சியை நடத்தி வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வாகன தொழிநுட்பம் சார்ந்த வல்லுனர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறினார் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் இயக்குநர் ராஷ்மி உர்த்வர்ஷி. இந்த வருடம் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகம் பேசப்பட உள்ளது என்றும், வாகனங்களுக்கான வடிவமைப்பு, வாகன பாதுகாப்பு உத்திகளை மேம்படுத்துவது உத்திகள் பேசப்பட உள்ளது என்றார்.

இந்த கண்காட்சி மூலம் வாகன ஆராய்ச்சி துறையில் அனுபவம் வாய்ந்தவர்களோடு புதியவர்களை இணைத்து செயல்பட வைக்க முடியும். இதன் மூலம் வாகன உற்பத்தி துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றார். ``மேக் இன் இந்தியா’’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த நேரத்தில், நமது வடிவமைப்பு, நமது தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடாக இந்த கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ராஷ்மி குறிப்பிட்டார்.

மோட்டார் வாகன துறை சந்தையில் எதிர்கொள்ளும் முக்கிய விஷயம் வாகனத்தின் பாதுகாப்பு சார்ந்துதான். இதை ஒட்டி பல்வேறு பாது காப்பு மேம்பாடுகளும் வாகன உருவாக்க ஆய்வில் மேற் கொள்ளப்படுகின்றன. இந்தியா வாகன ஆராய்ச்சி சங்கம் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. சுற்றுச்சூழல் மாசில்லாத பாதுகாப்பான வாகனங்களுக்கான உத்திர வாதத்தை இந்த சங்கம் கொடுக்கிறது என்றார்.

இந்த கண்காட்சியில் வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தவிர, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் 95 நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. பொது மக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வு மேற்கொண்டிருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். ஜனவரி 21-ம் தேதியிலிருந்து 24-ம் தேதி வரை புனே-யில் உள்ள இந்திய வாகன ஆராய்சி சங்க வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது என்றும் அசோக் லேலாண்ட் நிறுவனம் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT