வணிகம்

குஜராத்தில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு: ஆதித்ய பிர்லா குழுமம் திட்டம்

பிடிஐ

குஜராத் மாநிலத்தில் உள்ள தங்களது தொழில் நிறுவனங்களில் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா தெரிவித்தார்.

தங்கள் குழுமம் இம்மாநிலத்தில் தொழில் முதலீடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ``வைப்ரண்ட் குஜராத்’’ முதலீட் டாளர் மாநாட்டில் பேசிய பிர்லா தெரிவித்தார். சேவாகிராமில் உள்ள தங்களது சிமென்ட் ஆலை யை விரிவுபடுத்தத் திட்டமிட் டுள்ளதாக அவர் கூறினார். இது தவிர இங்குள்ள விளாயத் மற்றும் பரூச் உலோக ஆலைகளிலும் விரிவாக்கம் செய்யத் திட்ட மிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவில் முதலீடு செய்வதில் தங்கள் குழுமம் முதலில் தேர்வு செய்வது குஜராத் மாநிலத்தைத்தான் என்றும் சுட்டிக்காட்டினார்.

தொழில்துறையை ஊக்கு விக்கும் நடவடிக்கையை மாநில அரசு மிகச் சிறப்பாக செயல் படுத்துகிறது என்றும் இது தனது சொந்த கருத்து என்றும் குறிப்பிட்டார். மாநிலத்தில் வரிச் சலுகை எதுவும் அளிக்கவில்லை என்றாலும் உயர்ந்தபட்சமான அடிப்படைக் கட்டமைப்பு வசதி உருவாக்கியுள்ளதே சிறந்த சலுகைதான் என்று குறிப்பிட்டார்.

இம்மாநிலத்தில் தங்கள் குழும நிறுவனங்களின் முதலீடு ரூ. 25 ஆயிரம் கோடிக்கு மேல் என்று குறிப்பிட்ட அவர் இவற்றின் ஆண்டு வருமானம் ரூ. 30 ஆயிரம் கோடி என்று குறிப்பிட்டார். இதன் மூலம் நேரடியாக 10 ஆயிரம் பேருக்கும் மறைமுகமாக 20 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

அஜய் பாங்கா

இம்மாநாட்டில் பங்கேற்ற மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பாங்கா பேசுகையில், இதுவரையில் குஜராத் மாநிலத்தில் மட்டுமே இதுபோன்ற சர்வதேச முதலீட்டாளர் ஈர்ப்பு மாநாட்டை நடத்தி வந்த நரேந்திர மோடி, இனி இந்தியா முழுமைக்குமான மிகப் பெரிய மாநாட்டை நடத்துவார் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

மத்தியில் புதிதாக பொறுப் பேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு இது மிகவும் சரியான சந்தர்ப்பமாகும். முதலீட்டாளர்கள் முன்பாக உள்ள சில சந்தேகங்களைப் போக்க வேண்டிய கடமை உள்ளது என்று குறிப்பிட்டார். கொள்கைகளில் வெளிப்படைத் தன்மை, முடிவு களை விரைவாக எடுப்பது, ஸ்திரமான அதேசமயம் யூகிக்கக் கூடிய வகையிலான செயல்பாடு இருக்க வேண்டும் என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் கூறினார்.

மிகவும் முக்கியமான விஷயங் களான நிலச் சீர்திருத்தம், தொழி லாளர் சீர்திருத்தம், நிறுவன உரிமையாளர் குறித்த சீர்திருத்தம் ஆகியன வரவேற்கத்தக்க நடவ டிக்கை என்றார்.

SCROLL FOR NEXT