வணிகம்

என்.எஸ்.இ. மிட்கேப் 50 குறியீட்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ்

செய்திப்பிரிவு

‘என்.எஸ்.இ. மிட்கேப் 50’ குறியீட்டில் டிவிஎஸ் மோட்டார் பங்கு அடுத்த மாதம் முதல் இணைய இருக்கிறது. அதே சமயத்தில் டெக்ஸ்டைல் துறையை சேர்ந்த நிறுவனமான அர்விந்த் நிறுவனம் இந்த பட்டியலில் இருந்து வெளியேறுகிறது.

அர்விந்த் நிறுவனத்தில் இருந்து கட்டுமான பிரிவான அர்விந்த் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்தை தனியாக பிரிப்பதன் காரணமாக இந்த பட்டியலில் இருந்து அர்விந்த் வெளியேறுகிறது.

இந்த மாற்றம் வரும் பிப்ரவரி 23-ம் தேதி அன்று நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘நிப்டி மிட்கேப் 50’ குறியீட்டில் ரூ.1,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை சந்தை மதிப்பு (free-float market capitalization) இருக்கும் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.

இன்று விடுமுறை

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகள் (பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ) கரன்ஸி சந்தைகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளுக்கு விடு முறை விடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT