வணிகம்

ஜனவரியில் அந்நிய முதலீடு ரூ.11,300 கோடி

செய்திப்பிரிவு

ஜனவரி மாதத்தில் இதுவரை இந்திய கடன் சந்தையில் 11,300 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வந்திருக்கிறது. ஆனால், இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு 244 கோடி ரூபாய் மட்டுமே.

பணவீக்கம் குறைந்த காரணத்தால், வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக இந்திய கடன் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரித்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரிசர்வ் வங்கி கடந்த 15-ம் தேதி 0.25 சதவீதம் வட்டியை குறைத்தது.

இதன் காரணமாக கடன் சந்தையில் அந்நிய முதலீடு மேலும் அதிகரிக்கும் என்றே சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 2014-ம் ஆண்டு இந்திய கடன் சந்தையில் 1.16 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்றம் தொடரும்

பங்குச்சந்தையில் இந்த வாரமும் ஏற்றம் இருக்கும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். கச்சா எண்ணெய் விலை குறைவது, வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் வட்டி விகிதத்துடன் தொடர்புடைய பங்குகள் உயரும். மேலும், கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி, கெயின் இந்தியா, ஹெச்.யூ.எல். உள்ளிட்ட முக்கியமான பங்குகளின் காலாண்டு முடிவுகள் இந்த வாரத்தில் வர இருப்பதால் இந்த நிறுவனங்களின் முடிவுகள் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும். கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 663 புள்ளிகள் உயர்ந்தது.

SCROLL FOR NEXT