வணிகம்

விப்ரோ நிகர லாபம் 8% உயர்வு

செய்திப்பிரிவு

ஐடி துறையின் முக்கிய நிறுவனமான விப்ரோவின் டிசம்பர் காலாண்டு நிகரலாபம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.2,192 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண் டில் 2,014 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருமானம் 7 சதவீதம் உயர்ந்து 12,085 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 11,327 கோடி ரூபாயாக இருந்தது.

டிசம்பர் 31 நிலவரப்படி 1,56,866 நபர்கள் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றினார்கள். நிறுவனத்தில் வெளியேறுவோர் விகிதம் 16.4 சதவீதமாக இருக்கிறது. இந்த காலாண்டில் புதிதாக 44 வாடிக்கையாளர்களை விப்ரோ இணைத்திருக்கிறது.

நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சுரேஷ் சேனாபதி வரும் மார்ச் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால், நிதி பிரிவின் மூத்த துணைத்தலைவர் ஜடின் தலால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 5 ரூபாய் அறிவிக் கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT