இந்தியாவில் முதலீடு செய்ய இது சரியான நேரமாகும். இன்னும் 10-12 வருடங்களில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயரும் என்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவைத் தவிர முதலீடு செய்ய வேறு இடம் இல்லை. இப்போது 2 லட்சம் கோடி டாலராக இருக்கும் பொருளாதாரம் இன்னும் 10 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலராக உயரும் என்று டெல்லியில் நடந்த வென்ச்சர் கேப்பிடல் சங்க விழாவில் சின்ஹா தெரிவித்தார். அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு ஒமிடியார் நெட்வொர்க் இந்தியா அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர்.
இந்தியாவில் முதலீடுகள் உயர்ந்து வருவதால் ரூபா யின் மதிப்பு உயர்ந்து வரு கிறது என்றார். அந்நிய முதலீட்டாளர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் முக்கியமான வரி தொடர்பான விஷயங்கள்தான். இவை வர இருக்கும் பட் ஜெட்டில் சரி செய்யப்படும். பட்ஜெட் நெருங்கி வருவதால் இப்போதைக்கு அதை விரிவாக தெரிவிக்க முடியாது. ஆனால் அதற்கான தீர்வுகள் பட்ஜெட்டில் இருக்கும். அந்நிய முதலீட்டை கொண்டு வருவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. மேலும் அந்நிய முதலீட்டை இந்தியா வரவேற்கிறது என்றார்.
சர்வதேச அளவில் சிங்கப்பூர் மற்றும் லண்டன் ஆகிய நகரங்கள் சர்வதேச நிதி நகரங்களாக இருக்கின்றன. இந்தியாவில் அப்படி ஒரு நகரத்தை ஏன் உருவாக்க முடியாது என்று கேள்வி எழுப்பிய சின்ஹா, மும்பையை சர்வதேச நிதி நகரமாக மேம்படுத்த அரசு திட்டமிட்டிருக்கிறது என்றார்.