இந்தியா, வியட்நாம் இடையிலான வர்த்தகம் அடுத்த 5 ஆண்டு களில் 1,500 கோடி டாலர் அளவுக்கு உயரும் என்று இந்தியா வந்துள்ள வியட்நாம் துணை பிரதமர் ஹோங் டிரங் தெரிவித்தார்.
வியட்நாமில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வர்த்தகத் துறை அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்தினார். கடந்த நிதி ஆண் டில் இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 800 கோடி டாலராக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டு களில் இதை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
வியட்நாமில் ஜவுளி, வேளாண்துறை, மருந்து, தோல், மின்சாரம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவிலிருந்து வர்த்தகத் துறை செயலர் ராஜீவ் கேர் தலைமையிலான குழு வியட் நாமில் சுற்றுப் பயணம் மேற் கொண்டது. வர்த்தகம், ஜவுளி, மருந்து உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியா, வியட்நாம் இடையிலான வர்த்தக குழுவிடம் கேர் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே வர்த்தக உறவை வலுப்படுத்த 2013-ம் ஆண்டு இக்குழு உருவாக்கப்பட்டது. இரு நாடுகளிடையே வர்த்தக மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவதே இக்குழுவின் பிரதான பணியாகும்.
ஆசியான் பிராந்தியத்தினுள் வியட்நாம் வருகிறது. இந்நாட் டுடன் இந்தியா தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.