வணிகம்

நிதித்துறைச் செயலர் அர்விந்த் மாயாராம்

செய்திப்பிரிவு

மத்திய நிதித் துறைச் செயலராக அர்விந்த் மாயாராம் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவை பணி நியமன குழு அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில ஐஏஎஸ் அதிகாரியான அர்விந்த் மாயாராம் தற்போது பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலராக 2012-ம் ஆண்டிலிருந்து உள்ளார். நிதித்துறைச் செயலராக பொறுப்பேற்றாலும், இந்த பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.

மத்திய நிதி அமைச்சகத்தில் செலவுகள் பிரிவு செயலராக ஆர்.பி.வாட்டல், வருவாய் துறை செயலராக ராஜீவ் தாக்ரு, பொதுத்துறை பங்கு விலக்கல் துறை செயலராக ரவி மாத்துர், நிதிச் சேவைகள் துறைச் செயலராக ஜி.எஸ். சாந்து ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் நிதித்துறைச் செயலர் பதவியானது மூத்த பதவியாகும்.

SCROLL FOR NEXT