வணிகம்

நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4% - உலக வங்கி கணிப்பு

பிடிஐ

நடப்பாண்டில் (2015) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இத்தகவலை உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தெரிவித்தார்.

"வைப்ரண்ட் குஜராத்" நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் மேலும் கூறியது: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துவரும் சிறப்பான நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சியை எட்டும். இது வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். இந்திய பொருளாதாரம் வளர்ச்சி யடைவதற்கான காரணிகள் மற்றும் சூழ்நிலைகளை உலக வங்கி உற்று நோக்கி கணித்துள்ளாகக் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் கணிப்புப்படி இந்தியாவுக்கு வளமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் நடுத்தர ரக பொருளாதார வளர்ச்சியை எட்டும் நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 6.4 சதவீத வளர்ச்சி எட்டுவதோடு அடுத்த ஆண்டில் இதைவிட அதிகமான வளர்ச்சி இருக்கும் என்றார்.

முந்தைய இரண்டு நிதி ஆண்டுகளிலும் 5 சதவீதத்துக்கும் குறை வான வளர்ச்சி எட்டப் பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதோடு அது வளர்ந்து 5.7 சதவீதம் மற்றும் 5.3 சதவீத வளர்ச்சியை நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் எட்டியதையும் சுட்டிக் காட்டினார்.

மிகவும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவதற்கான வழி வகைகளை மோடி தலை மையிலான அவரது அரசு செய்து வருகிறது. இந்த வளர்ச்சியின் பலன் அனைவரையும் எட்ட வேண்டும் என்பதற்காக சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை (ஜிஎஸ்டி) அமல்படுத்த அரசு அவசரகால உத்தரவை பிறப்பித்ததை தாம் வரவேற்பதாக ஜிம் குறிப்பிட்டார். புதிய மறைமுக வரி விதிப்புக்கான வழி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதாக வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி யுள்ளதாக அவர் கூறினார்.

ஜிஎஸ்டி என்பது ஒரே சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதாக இருப்பதோடு அது நிறுவனங்களுக்கு பல வழிகளில் சிக்கனமானதாக அமையும். இருப்பினும் இது ஒரே சீரான வரி விதிப்பாக இருக்க வேண்டும் என்று குறிப் பிட்டார்.

வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற பிரதமரின் பரந்துபட்ட நோக்கு தன்னை வியப்படையச் செய்வதாகக் கூறினார். ஒருங்கிணைந்த ஸ்திரமான வளர்ச்சித் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள உலக வங்கி தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

SCROLL FOR NEXT