தங்களுடைய தங்க முதலீட்டுத் திட்டத்தில் சேருபவர்களுக்கு லாபம்தான் கிடைக்கும் என்று பிரபல நகை விற்பனை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஒரு லட்சம் முதலீட்டுத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்குப் பின்பு 51.5 கிராம் ஒரு கிராம் ரூ. 1,940 என்ற விலையில் கிடைக்கும். ஒருவேளை 5 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 1,500 என்ற விலைக்குக் குறைந்தால் வாடிக்கையாளர்கள் அதை 66.66 கிராமாகப் பெறுவார்கள். இதில் ஒரு கிராம் ரூ. 1,500 விலையில் 66.66 கிராமுக்கு ரூ. 1,00,000 கிடைக்கும்.
இன்றைய விலை நிலவரத் தின்படி ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரு கிராம் ரூ. 2,800 என்ற விலையில் 35.71 கிராம் மட்டுமே கிடைக்கும். அதுமட்டுமல்ல 1985-ம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தே வந்துள்ளது. இதையும் வாடிக்கையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்டு | ஒரு கிராம் விலை |
1985 | 200 |
1990 | 320 |
1995 | 465 |
2005 | 700 |
2010 | 1800 |
2014 | 3000 |
2019 | ? |