வணிகம்

ஹுத் ஹுத் புயல்: காப்பீட்டு நிவாரணம் ரூ.374 கோடி

செய்திப்பிரிவு

ஹுத் ஹுத் புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காப்பீட்டுத் தொகை யாக 374 கோடி ரூபாய் வழங்கப் பட்டது. தொழில் நிறுவனங் களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்புகளுக்கு ஈடாக இந்த தொகையை 14 காப்பீடு நிறுவனங்கள் வழங்கி இருக் கின்றன. இழப்பீடு கோரி 5,953 விண்ணப்பங்கள் வந்தன.

இதில் 5,313 விண்ணப் பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆவணங்கள் சரியாக இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் மற்ற விண்ணப் பங்கள் நிராகரிப்பட்டன.

மதிப்பு இறக்கம் (Depreciation) 10 முதல் 20%, பொதுவான தள்ளுபடி 10 - 20% ஆகிய வற்றை கழிக்கு காப்பீட்டுத் தொகை இறுதி செய்து வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT