இப்போது மட்டும் அல்ல, எப்போதும் எனக்கு பிடித்த கார் பென்ஸ். ஒருமுறை அந்த காரில் பயணம் செய்தால் போதும் ‘அடிக்ட்’ மாதிரி அந்த காரையே மீண்டும் மீண்டும் மனம் தேடும். பென்ஸ் காருக்கு நிகர் பென்ஸ் கார் மட்டும்தான். சர்வதேச அளவில் அவ்வபோது வரும் நவீன உபரி பாகங்களின் டிசைன்ஸ் எல்லாம் உடனுக்குடன் பொறுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் கார்களில் இதுவும் ஒன்று.
காரில் அமர்ந்து பயணம் செய்வது ஏதோ வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் நமக்கு பிடித்த இசையமைப்பாளரின் பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பது போலவே இருக்கும். இந்த உணர்வை எனக்குள் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அதோட டிசைன்ஸ், பாடி லாங்குவேஜ், லுக் எல்லாமே நவீனம் கலந்தே பிரதிபலிக்கும். எனக்கு பிடித்த நிறம் சில்வர் என்கிறார் சூர்யா.