பங்குச்சந்தை சார்ந்த பென்ஷன் திட்டங்களை வெளியிட ரிலை யன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறு வனத்துக்கு அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த பென்ஷன் திட்டங்கள் மூலம் முதலீட் டாளர்களுக்கு வரிச்சலுகை கொடுக்க முடியும். இந்த வகைக்கு இப்போதுதான் அனு மதி கொடுக்கப்படுகிறது. முதல் அனுமதி ரிலையன்ஸ் நிறுவனத் துக்கு கிடைத்திருக்கிறது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தனிநபர்களுக்கு ஒரு நிதி ஆண்டில் 1.5 லட்ச ரூபாய் வரை (80 சி பிரிவின் கீழ்- அடுத்த நிதி ஆண்டில்) முதலீட்டின் மீதான வரிச்சலுகை கிடைக்கும்.
இதன் மூலம் பணவீக்கத்தால் ஏற்படக்கூடிய இழப்பை ஈடுகட்டும்வகையில் முதலீட்டாளர்களுக்கு வருமானம் கிடைப்பதற்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும்.
மேலும் இந்த திட்டங்களுக்கு முதலீட்டின் மீது வரிச்சலுகை கிடையாது. தவிர இவை 15 வருடங்களுக்கு முன்பாக அனுமதி வாங்கியவை ஆகும்.