பொருளாதார நிபுணரான பிபேக் தேப்ராய் நிதி ஆயோக் அமைப்பில் முழு நேர உறுப்பினராக இணைந்தார். இந்த அமைப்பின் முழு நேர உறுப்பினராக இவரையும் முன் னாள் டிஆர்டிஓ தலைவருமான வி.கே.சரஸ்வத்-ம் நியமிக்கப்பட்டார்கள்.
முதல் நாள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதை தவிர எதுவும் கூற முடியாது என்று தெரிவித்து விட்டார். கொல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியிலும், டெல்லி டிரினிட்டி கல்லூரியிலும் படித்தவர். பொருளா தாரம் தொடர்பாக பல புத்தகங்களும், கட்டுரைகளும் எழுதியவர். பொருளாதார செய்திதாள்களில் ஆலோசகராகவும் இருந்தவர்.