வர்த்தகச் சமநிலை இந்தியாவுக்கு சாதகமாக இல்லை என மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நமது தொழில்களை விரிவுபடுத்த ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் புதிய வாய்ப்புகளை தேடவேண்டும்.
இந்திய வர்த்தக கண்காணிப்பு நடவடிக்கைகளை சுதந் திரமானதாகவும், சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு ஏற்ப வர்த்தக வசதிகளை கொடுக்கவும் இலக்கு வைத்துள்ளோம். ஏற்றுமதி விதிமுறைகள், வம்சா வழியினருக்கான விதிமுறைகள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நுட்பங்களை அடையாளம் காண்பது போன்ற விஷயங்களில் ஒரே இடத்தில் தீர்வு காண்பது போன்ற வசதிகள் கொண்டுவர வேண்டும் என்றார்.
ஏற்றுமதி அதிகரிப்பது என்பது நமது பொருளாதாரத்தை உயர்த்தும் என்றவர். ஏற்றுமதி துறைகளை அடையாளம் காண வேண்டும் என்றார். இதற் காக ஏற்றுமதியாளர்கள் இணைய தளங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றார்.
2013-14 ஆம் ஆண்டில் 31,400 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி வர்த்தகம் 2014-15 ஆண்டில் 34,000 கோடி டாலராக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம் என் றார். இதற்காக நாம் பல்வேறு வழிகளிலும் தகவல்களை திரட்டிக் கொள்ள வேண்டும். அப்போது தான் சந்தையில் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.
சர்வதேச அளவிலான ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியா 19 வது இடத்தில் உள்ளது. ஏற்றுமதியில் 1.7 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தை நோக்கி உற்பத்தியாளர்கள் வர வேண்டும் என்றார்.