பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் மானியங் களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
செலவு நிர்வாக கமிட்டியிடம் பல முறை ஆலோசனை நடத்தி இருக்கிறேன். மானியங்களை ஒழுங்குமுறை படுத்துவதற்காக வந்துள்ள யோசனைகளை அவர் கள் செயல்படுத்தி வருகிறார்கள். அடுத்த சில மாதங்களில் மானியங்களை ஒழுங்குபடுத்து வதற்காக இடைக்கால பரிந்து ரைகளை அந்த கமிஷன் எங்க ளுக்கு அளிக்கும். அந்த பரிந்துரை களை மத்திய அரசு செயல்படுத்தும் என்று இந்திய பொருளாதார மாநாட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
சந்தை விலைக்கு ஏற்ப டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்தது, இந்த முடிவு மூலம் அரசின் மானிய சுமை குறைய உதவியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார். மேலும் குறிப்பிட்ட நகரங்களில் சமையல் எரிவாயுவுக்கு மானி யத்தை நேரடியாக வழங்க முடிவு செய்திருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
மேலும் அரசின் நிதிப்பற்றாக் குறையை குறைப்பதற்கான, மானியங்களை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அரசு பல வகைகளில் மானியம் கொடுத்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டுக்கு 2.51 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நடப்பு கூட்டத்தொடரில் காப்பீடு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) தாக்கல் செய்ய முடியும் என்று இந்திய பொருளாதார மாநாட்டில் நம்பிக்கை தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை கூட்டித்தான் மாசோதாவை நிறைவேற்ற வேண்டுமா என்று கேட்டதற்கு, இதை பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் தவிர்க்க முடியாத சூழல் வந்தால் பயன்படுத்துவோம் என்றார் அருண் ஜேட்லி.